Sunday, February 24, 2013

ஆப்கான் உளவுத்துறை அலுவலகம் மீது இன்று காலை தலிபான் தற்கொலை தாக்குதல்!

ஆப்கான் உளவுத்துறை அலுவலகம் மீது இன்று காலை தலிபான் தற்கொலை தாக்குதல்!

Viruvirupu, Sunday 24 February 2013, 08:01 GMT
வெளியே வெடித்தது கார்

இன்று காலை ஆப்கான் தலைநகர் காபுல் அருகே உள்ள உளவுத்துறை அலுவலகத்துக்கு முன் தற்கொலை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடத்த காரில் வந்த நபர் உளவுத்துறை அலுவலகத்துக்கு உள்ளே நுழைய முடியாமல், வெளி கேட் அருகே மடக்கப்பட்டதில், கார் வெடித்துச் சிதறி இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

காபுல்லில் இருந்து 159 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத்தில் உள்ள தேசிய உளவுத்துறை அலுவலகமே தீவிரவாத அமைப்பினரால் இலக்கு வைக்கப்பட்டது.

இன்று சூரிய உதயத்தின்பின் இந்த அலுவலகத்தை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது. வெளி கேட்டையும், மரத் தடுப்பையும் கடந்து உள்ளே போய் அலுவலகத்தில் மோதுவதே திட்டம்.

ஆனால், கார் வேகமாக வருவதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் இரும்பு கேட்டை மூடிவிட்டதில், கார் கேட்டில் மோதி வெடித்தது.

கேட்டை மூடிய இரு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர்.

ஆப்கான் தலிபான் சார்பில் அவர்களது செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், இந்த தாக்குதலுக்கு தலைிபான்கள் உரிமை கோருவதாக தெரிவித்துள்ளார்.

LATEST 10 UPDATES
1.ஆப்கான் உளவுத்துறை அலுவலகம் மீது இன்று காலை தலிபான் தற்கொலை தாக்குதல்!Sunday 24 February 08:01 GMT
2.இலங்கை மீடியாக்காரர்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்! புதிய சட்டம்!!Sunday 24 February 07:22 GMT
3."அஜீத் போன் பண்ணியபோது நீர்தான் டயல் செய்து கொடுத்தீரா?" குஷ்பு ஆச்சரியம்!Sunday 24 February 06:49 GMT
4."விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இழுத்து வாருங்கள் என்று சொன்னது யார்?"Sunday 24 February 05:57 GMT
5.Time சஞ்சிகைக்காக Times of Indiaவை எரித்த தமிழக காங். தலைவர் யுவராஜா சஸ்பென்ட்!Sunday 24 February 05:19 GMT
6.அம்மா மெஸ்: சென்னையில் மேலும் 24 இடங்களில் இன்றுமுதல் 1 ரூபா இட்லி!!Sunday 24 February 04:35 GMT
7.கனடாவில் பனிச்சரிவு! விளையாடி கொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கினர்!!Sunday 24 February 04:14 GMT
8.ஜெ. பிறந்தநாள்: 'மக்களை தேடி அம்மா' திட்டத்துக்கு நம்ம 'தோப்பு' அல்லவா வருகிறார்!Sunday 24 February 03:43 GMT
9.மாமியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடினார் திருவண்ணாமலை மருமகன்!Sunday 24 February 03:22 GMT
10.ஹைதராபாத் குண்டு வெடிப்பு: ஏன் மதானியை விசாரியுங்கள் என்கிறது மத்திய உளவுத்துறை?Sunday 24 February 02:34 GMT

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors